கடந்த நவம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் மாநாடு. வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான இந்த படம் நடிகர் சிம்புவுக்கு மாபெரும் திருப்புமுனை என்றே கூறலாம். ஊரடங்கிற்கு மத்தியிலும் 100 கோடி வரை இந்த படம் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது அஜித்தின் மங்காத்தா படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனை செல்போனில் மிரட்டி அஜித் சில காரியங்கள் செய்ய வைப்பார்.
Semma creativity bro👌🏽👍🏽 https://t.co/90NPHrqjL7
— venkat prabhu (@vp_offl) January 23, 2022
அதேபோல் மாநாடு படத்திலும் எஸ் ஜே சூர்யா சிம்புவை மிரட்டி முதல்வரை சுடச் சொல்வார். இந்த இரண்டு காட்சிகளையும் ஒப்புகை படுத்தி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை வெங்கட்பிரபு தனது வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் இந்த இரண்டு படமும் எந்த அளவிற்கு ஒத்துப் போய் உள்ளது என ரசிகர்கள் பலர் தங்கள் பாராட்டுகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார்.