Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ரூட்டில் இறங்கிய சந்தானம்… நேற்று ஃபர்ஸ்ட் லுக் இன்று டப்பிங்கா? … ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!

நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிவிட்டாராம்.

தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவர் தற்போது இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகளை சந்தானம் துவங்கியுள்ளாராம்.

ஒருபுறம் படப்பிடிப்பு நடைபெற்று வர இதனிடையே தான் நடித்து முடித்த காட்சிகளுக்கு டப்பிங் செய்து வருகிறார் நடிகர் சந்தானம். சமீபத்தில் சிம்பு மிக வேகமாக படப்பிடிப்புகளை முடித்து செயல்பட்டது போல் தற்போது சந்தானமும் விறுவிறுப்பாக செயல்படுகிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என சந்தானம் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |