நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள ‘பத்து தல’ படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் தயாராகி பொங்கலுக்கு வெளியாகவுள்ளது . தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார் . அடுத்ததாக நடிகர் சிம்பு நடிக்க உள்ள பத்து தல படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ளார். இந்த படத்தில் சிம்புவுடன் இளம் நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ளார். இந்த படம் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ரீமேக்.
இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . நடிகை பிரியா பவானி சங்கர் மேயாதமான் ,கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் . தற்போது இவர் குருதி ஆட்டம்,ஓமணப் பெண்ணே ஆகிய படங்களில் நடித்துள்ளார் . மேலும் கமல்ஹாசன்- ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன்-2 படத்தில் நடித்துவருகிறார் .