Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘பத்து தல’… சூப்பர் அப்டேட் சொன்ன முக்கிய நடிகர்…!!!

சிம்புவின் பத்துதல படம் குறித்து நடிகர் டி.ஜே.அருணாச்சலம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டி.ஜே.அருணாச்சலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் பத்து தல படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் டி.ஜே.அருணாச்சலம் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘இன்று கௌதம் கார்த்திக்குடன் ஒரு மாஸான காட்சிக்காக தயாராகி வருகிறேன். என்னை வாழ்த்துங்கள்’ என தெரிவித்துள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |