Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘பத்துதல’… 2 பாடல்களை முடித்த ஏ.ஆர்.ரஹ்மான்… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக உள்ள பத்து தல படத்திற்காக ஏ.ஆர் ரஹ்மான் 2 பாடல்களை முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து  பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடிகர் சிம்பு பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளார். இதில் பத்து தல திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும் .

AR Rahman to compose for Simbu-Gautham Karthik's Pathu Thala- Cinema express

இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ளார். இந்நிலையில் பத்து தல படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு பாடல்களை முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கிருஷ்ணா- ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானதால் இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |