Categories
சினிமா

“சிம்புவின் அதிர்ஷ்டத்திற்கு இது தான் காரணமாம்!”…. இது என்னடா புது புரளியா இருக்கு…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக விளங்கியவர் சிம்பு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் நடித்த படங்கள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்தன. அவ்வளவுதான் சிம்பு இனிமேல் சினிமா பக்கம் தலை வைத்தும் படுக்க முடியாது மூட்டை முடிச்சை கட்ட வேண்டியதுதான் என அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு மாநாடு படத்தின் மூலம் பழைய மார்க்கெட் மீண்டும் திரும்ப கிடைத்தது. தொடர்ந்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் மூலம் சிம்புவின் மவுசு மீண்டும் அதிகரித்தது. அதோடு இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு டாக்டர் பட்டமும் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறார் நடிகர் சிம்பு.

இதற்கு எல்லாவற்றிற்கும் தன் தாய் வாங்கி கொடுத்த கார்தான் காரணமென சிம்பு நம்பி வருகிறாராம். சிம்புவின் தாயார் அவருடைய பிறந்தநாளுக்கு உயர்ரக மினி கூப்பர் காரை வாங்கி பரிசாக அளித்துள்ளார். அந்த கார் வந்ததிலிருந்து தான் தனக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதுவதாக சிம்பு நம்பி வருகிறார். மேலும் இத்தனை கார்கள் வந்தாலும் அந்த மினி கூப்பர் காரை விட்டுக் கொடுக்க மாட்டேன் எனவும் கூறிவருகிறாராம் நடிகர் சிம்பு. தற்போது அவருடைய சம்பளம் 20 கோடி உயர்ந்துள்ளது. இதற்கும் இந்த கார் வந்த அதிர்ஷ்டமே காரணம் என தனது நண்பர்களிடம் கூறி மகிழ்ந்து வருகிறாராம் சிம்பு.

Categories

Tech |