Categories
மாநில செய்திகள்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு… உடனே போய் பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. உள்மதிபபீடு அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்ப்பட்டது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் முடிவுகள் இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியாகும் என்று சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்கள் cbseresults.nic.in , cbse.gov.in இல் காணலாம். அல்லது Digilocker, Umang செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலமும் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள், பள்ளிகளில் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். பத்தாம் வகுப்பு அகமதிப்பீடு மற்றும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |