Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சின்னது இல்ல…. பெருசு தான் பிடிக்கும்….. “வானம் தான் அவருக்கு எல்லை”…. சூர்யாவை புகழ்ந்து தள்ளிய ரோஹித்.!!

இந்திய கேப்டன் ரோஹித் சூர்யகுமார் யாதவை புகழ்ந்து பேசினார், மேலும் சிறிய மைதானங்களை விட பெரிய மைதானங்களில் விளையாடுவதை சூர்யா விரும்புவதாக ஒருமுறை தன்னிடம் கூறியதாக கூறினார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்று சிட்னியில் நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும்  நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.. அதன்பின் நாளை இரண்டாவது அரையிறுதியில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் அடிலெய்டு மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வலைபயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வலது கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் ரோஹித்துக்கு என்னாச்சு என பதறிப் போய் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்தனர். அதன்பின் அவர் மீண்டும் பயிற்சி செய்ய தொடங்கியதால் சற்று நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் ரோஹித் சர்மா கூறியதாவது, நான் நன்றாக இருக்கிறேன், அது லேசான சீராய்ப்பு காயம் தான். எனக்கு முழுவதுமாக சரியாகி விட்டது எனக் கூறினார்.

மேலும் அவர் இந்திய வீரர் சூர்யகுமார் யாவை புகழ்ந்து பேசி உள்ளார். ரோஹித் பேசியதாவது, சூர்யகுமார் யாதவ் பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டு ஆடுகிறார். அவர் மற்ற பேட்டர்களிடமிருந்து அழுத்தத்தை எடுத்துள்ளார். அவரது ஆட்டத்தை நாங்கள் நன்றாக புரிந்துகொள்கிறோம், சூர்யாவிடம் இருந்து பலமுறை அந்தப் பக்குவம் வெளிப்படுகிறது. அவர் பேட்டிங் ஆடும் போது மற்ற வீரர்களுக்கும் அது பற்றிக் கொள்கிறது என்றார்.

தொடர்ந்து சிறிய மைதானங்களை விட பெரிய மைதானங்கள் தான் சூரியகுமாருக்கு பிடிக்கும் அதை அவர் அதிகமாக விரும்புவார். ஏனென்றால் சிறிய மைதானங்களில் இடைவெளியை பார்க்க முடியாது. பெரிய மைதானங்களில் இடைவெளியை காணலாம் என்று தன்னிடம் சொன்னதாகவும், அவருக்கு வானம் தான் எல்லை என்று தெரிவித்தார்.

Categories

Tech |