Categories
இந்திய சினிமா சினிமா

சினிமா ரசிகர்களுக்கு இன்ப செய்தி : டிசம்பர் 5,6இல் முற்றிலும் இலவசம்….. வெளியான அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக திரையரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு தளங்கள் அனைத்தும் மூடப்பட்டன. எனவே சினிமா ரசிகர்கள் அனைவரும் OTT தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட தளங்களுக்குச் சென்று படங்களை பார்வையிட தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டை விட தற்போது OTT தளங்களில் வெப்சீரிஸ் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக இந்தியர்களில் பலர் நெட்ப்ளிக்ஸ் தலங்களில் வெளியாகும் வெப்சீரிஸ்களையே அதிகம் விரும்பி பார்ப்பதாகவும், மணி ஹெய்ஸ்ட் என்னும் சீரிஸ் அதிகமான பார்வையாளர்களை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் இந்தியாவில் வருகிற டிசம்பர் 5,6 ஆம் தேதிகளில் இலவச சேவை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி,

இந்தியாவில் டிசம்பர் 5 நள்ளிரவு 12 மணி முதல் டிசம்பர் 6 இரவு 12 மணிவரை இலவசமாக பயன்படுத்தலாம். இந்த இலவச சேவையை பயனர்கள் netflix .com /in/StreamFest என்ற இணையதளத்தில் உங்கள் பெயர் , மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண் மற்றும் கடவுச்சொல் உடன் பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |