பஞ்சாபில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெட்ரோல் பம்ப் உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளரை அடையாளம் தெரியாத இளைஞர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் ஃபதேகர் சுடியா சாலையில் பெட்ரோல் பம்ப் நடத்தி வரும் மோகன் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் இன்னோவா காரில் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்த மோகன் சிங் தனது காரில் வீட்டிற்கு வெளியே வந்தபோது, அடையாளம் தெரியதாத மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் முழுவதும் வீட்டின் வெளியே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.