Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமாவை விட்டு போறேன்” அஜித்தே கூறினாரா….? இயக்குனர் பகிர்ந்த தகவல்….!!

தமிழ் திரையுலகில்  தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் நடிக்கும் படங்கள் எப்போதும் அதிக வரவேற்பை பெறும். இத்தகைய சிறந்த நடிகர் சினிமாவை விட்டு போவதாக ஒருகாலத்தில் கூறியிருப்பார் என்பதை யாராலும் நம்ப முடியாது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பு உன்னைத் தேடி என்ற படம் அஜித் நடிப்பில் வெளியானது இந்த படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார்.

இதுகுறித்து சமீபத்தில் சுந்தர் சி பகிர்ந்த போது, “அந்த சமயத்தில் அஜித் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டார். இதனால் சினிமாவில் இருந்து விலகுவதாக அஜித் கூறினார். ஆனால் அதன்பின்பு எப்படி அவர் முடிவை மாற்றினார் என்பது தெரியவில்லை. தற்போது தனது தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் இந்த உயரத்தில் அவர் இருப்பது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது” என கூறியுள்ளார்.

Categories

Tech |