Categories
தேசிய செய்திகள்

சினிமாவை மிஞ்சிய சம்பவம்…. ஒரு வாலிபருக்காக 5 பெண்கள்…. ட்ரெண்டான வீடியோ…. நீங்களும் பாருங்க….!!!!

ஒரு வாலிபருக்காக 5 பெண்கள் சண்டை போடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபரை 4  பெண்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள சோன்பூரில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் தனது காதலியுடன் அதே பகுதியில் நடந்த கண்காட்சி நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களை அந்த வாலிபரின் இன்னொரு காதலி பார்த்துள்ளார். இதனால்  ஆத்திரம் அடைந்த அந்த பெண்  வாலிபரிடம் தகராறு செய்துள்ளார். இவர்கள் சண்டை போடுவதை அந்த வாலிபரின் இன்னொரு காதலி பார்த்து விட்டார். இப்படியே மொத்தம் 5  காதலிகள் ஒரே இடத்தில் எதிர்பாராமல் வந்துள்ளனர். இவர்களுக்கு நடுவே அந்த வாலிபர் மாட்டிக் கொண்டார்.

இந்நிலையில் அந்த வாலிபர் 5  பெண்களையும் சாமர்த்தியமாக ஏமாற்றி வந்துள்ளார். இதனையடுத்து  5 பேரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை இழுத்தும், ஆடைகளை கிழித்தும் சண்டை போட்டுள்ளனர். இதனை அங்கு திரண்டு இருந்த மக்கள் நின்று வேடிக்கை பார்த்ததுடன் சிரித்துக் கொண்டே தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். அதில் அந்த பெண்கள் அவன் என் லவ்வர், அவன் என்னுடைய பாய் பிரண்ட் என கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |