Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சினிமாவில் நடிக்க வைக்கிறேன்” உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்…. இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூரில் 21 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் மாடலிங் துறையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் பெண் பெயரில் இந்த இளம்பெண்ணுடன் வாட்ஸ்அப் மூலம் பேசி வந்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த நபர் இளம்பெண்ணின் புகைப்படங்களை கேட்டு பெற்றுக் கொண்டார். அதன் பிறகு தான் தன்னுடன் பழகிய ஆண் என்பது இளம்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதற்கிடையில் உனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் வெளியிடுவேன் என கூறி உல்லாசத்திற்கு வருமாறு அந்த நபர் இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அந்த இளம்பெண் கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருப்பூரை சேர்ந்த ரஞ்சித் என்பவர் இளம்பெண்ணை மிரட்டியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |