விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. பிரபலம் இல்லாத நட்சத்திரங்கள் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலமாக ஓவர் நைட்டில் பிரபலமாகிவிடலாம் அதனாலேயே இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு பலரும் ஆர்வம் காண்பித்து வருகின்றார்கள். அப்படிப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வந்தவர் தான் மேடை நாடக கலைஞர் தாமரைச்செல்வி. மிகவும் வெளந்தியான இவர் ஆரம்பத்தில் பிக் பாஸில் விளையாடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார் அதன் பின் விளையாட்டின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடி அனைவரையும் கவர்ந்தார். இந்த நிலையில் இவர் இறுதிப் போட்டிக்கு கட்டாயம் செல்வார் என நினைத்திருந்த வேளையில் திடீரென எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிவிட்டார்.
இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் அதற்கு அடுத்த தொடங்கப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளராக இவர் கலந்து கொண்டுள்ளார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை நிரூபித்த இவருக்கு தற்போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் சினிமாவில் நடிக்கிறேன் எனக் கூறி ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி போன்றவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார். இதனை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள் மேலும் அவர் நடிக்கும் படத்தில் ரோபோ சங்கருக்கு ஜோடியாக நடிக்கின்றாரா என்னும் கேள்வியும் எழுப்பி வருகின்றார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் போது தாமரைக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. இதுபோல் இன்னும் அவர் நிறைய படங்களை நடித்து சாதிக்க வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.