Categories
அரசியல் மாநில செய்திகள்

சினிமால இருந்து வந்தா… எனக்கு கடுப்பு வரும்…. விஜய்க்கு சீமான் அட்வைஸ் ..!!

சூர்யா அளவுக்கு பேசிவிட்டு நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து சீமான் விமர்சனம் செய்தார். இதனால் கோபம் அடைந்த விஜய் ரசிகர்கள் சீமானை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதுகுறித்தான கேள்விக்கு பதிலளித்த சீமான், விஜய் ரசிகர்கள் கோபமாக இருந்து என்ன ஆகப் போகுது ? எல்லாமே என்னோட தம்பிகள் தான். அவர்களுடைய ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்துகின்றார். அவர்கள் அரசியல் படுத்தப்படவில்லை.

நடிப்பது மட்டுமே நாடாளா தகுதி வந்து விடுகிறது என்பதை நான் ஏற்கவில்லை. எங்களுடைய கோட்பாடு ஏற்கவில்லை. தியாகங்களை திரைக் கவர்சியால் மூடுவதை நங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.எம்ஜிஆர் அவர்களைக் கூட நாங்கள் தொடாமல் பயணிப்பது இதனால் தான். இப்பொழுது அவரை ஏன் தொட்டு வாறீங்க. அவருக்கு முன்பு காமராஜர், கக்கன், ஜீவானந்தம் இருக்கின்றார். இப்போது நல்லகண்ணு வாழ்ந்து கொண்டிருக்கின்றார் இவர்களைத் தாண்டி அரசியல் தலைவர்கள், புனிதர்கள் உண்டா ?

தமிழனுக்கு ரோல்மாடலே இல்லாதா மாதிரி எம்ஜிஆர் மாதிரி வரணும், ரஜினி வரணும் என்று சம்மந்தமே இல்லாதவர்களை கொண்டு வாறீங்க என்றால் வெறுப்பு வரத்தான் செய்யும். இதை புரியாத தம்பிகள், சிலர் பேசுவார்கள். தொடக்க காலத்திலிருந்து தம்பி விஜய்யை அதிகமாக தற்காத்து இருந்தது நான் தான். மற்றவர்கள் போல கிடையாது விஜய் மீது எனக்கு பேரன்பு உண்டு. என்னோட தம்பி குறைந்தபட்சம் சூர்யா அளவிற்காவது விஜய் குரல் கொடுக்க வேண்டும். விஜய்யின் புகழ் வெளிச்சத்தில் மக்களுக்காக நிற்க வேண்டும்.

விஜய் அரசியலுக்கு வரட்டும்.  வர வேண்டாம் என்று சொல்லவில்லை. மக்களுக்காக காலத்தில் நின்று, போராடி மக்களின் நன்மதிப்பை பெற்று அரசியல் செய்யுங்க. வெறும் திரை கவர்ச்சியை வைத்துக் கொண்டு, நாட்டை  ஆள வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள் என்று தான்  நான் சொல்கின்றோன் என சீமான் தெரிவித்தார்.

Categories

Tech |