தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தன்னுடைய குறளின் வாயிலாக பலரை தன் வசம் ஈர்த்த பாடகர் சித் ஸ்ரீராமை பாராட்டி நடிகர் அல்லு அர்ஜுன் பதிவிட்டுயிருக்கிறார்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “புஷ்பா”. இத்திரைப்படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், தனஞ்செயா, அஜய், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளிவந்து அனைவரின் மனதையும் ஈர்த்தது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் அனைவரும் பேசும்படி இருந்தது. “ஓ சொல்றியா மாமா” என்ற பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடியது சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் பாடல் வைரலானது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த “ஸ்ரீவல்லி” பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார்.
இப்பாடலை பாடியிருந்த சித் ஸ்ரீராமை புகழ்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் பதிவிட்டிருக்கிறார். பதிவில் கூறியதாவது, “தனது சகோதரர் சித் ஸ்ரீராம் ஒரு நிகழ்ச்சியில் “ஸ்ரீவள்ளி” பாடலை பாட ஆரம்பித்தார். அவர் பாடும்பொழுது பின்னணி இசை இசைக்கப்படும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால் எதுவும் வாசிக்கப்படவில்லை. அவர் பாடியது மட்டுமே கேட்டது. எந்த ஒரு பின்னணி வாத்தியங்களும் இல்லாமல் அவர் குரலை மட்டுமே கேட்டேன். அவர் பாடியதைக் கேட்டு இசை மழையில் நான் மூழ்கினேன். இவர் குரலில் ஏதோ வசியம் இருக்கிறது என்பது ஒன்றே என் மனதில் ஓடிக்கொண்டு இருந்தன. இவருக்கு பின்னணி இசை எதுவும் தேவையன்று, இவரே ஒரு இசை” என்று பதிவிட்டுள்ளார்