Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சித்ரா பௌர்ணமி” கடற்கரையில் தோன்றிய அபூர்வ காட்சி…. ஆர்வத்துடன் பார்த்த சுற்றுலா பயணிகள்….!!

விடுமுறை தினத்தை முன்னிட்டு கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து சந்திரன் உதயமாகும் காட்சி தெரியும். இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் இந்த அபூர்வ காட்சியை பார்ப்பதற்காக கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனையடுத்து மாலை 6 மணி அளவில் அரபிக்கடல் பகுதியில் மஞ்சள் நிற சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.

அப்போது வங்கக்கடல் பக்கமாக சந்திரன் மேகக் கூட்டங்களில் இருந்து வெளியே வந்தது. இந்த அபூர்வ காட்சியை திரிவேணி சங்கமம் மற்றும் சன்செட் பாயிண்ட் பகுதியில் நின்றபடி சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் செல்பி எடுத்தனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுப்பதற்காக காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Categories

Tech |