அருணாச்சலேஸ்வரர் கோவில் சித்ரா பௌர்ணமி விழாவிற்கு 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளனர்.
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை.
இந்த வருடம் இன்று சனிக்கிழமை சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வேலூர் மாவட்டத்திலிருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் 350 காவல்துறையினர் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இருந்து நேற்று வேன்களில் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளார்கள்.