Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நடைபெறும் திருவிழா….. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

பிரசித்தி பெற்ற பிரசன்ன  வெங்கடாஜலபதி கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் பிரசித்திபெற்ற  பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்று  காலை மூர்த்த கால் நடுதலுடன் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் நாளை காலை  5 மணிக்கு அனுக்கை , விக்னேஸ்வர போன்ற  பூஜைகள் நடைபெறுகிறது. அதன்பின்னர் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த திருவிழாவில்  முக்கிய நாட்களாக 15-ஆம் தேதி திருமஞ்சனம், சாமி புறப்பாடு, 16-ஆம் தேதி  பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும், 17-ஆம் தேதி பெருமாள் கோவிலுக்கு புறப்பாடு நிகழ்ச்சி, மாணிக்கவல்லி விநாயகர் கோவில் மண்டபத்தில் திருமஞ்சனம், தீர்த்தவாரி, கருட சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில்  மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் கே .ஆர். இளங்கோவன், தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவணகணேஷ் ஆகியோர்  செய்கின்றனர்.

Categories

Tech |