Categories
மாநில செய்திகள்

சித்த மருத்துவ பல்கலை.மசோதா…. கேள்விகேட்டு கடிதம் அனுப்பிய கவர்னர்….. விரைவில் பதில் அளிக்கும் தமிழக அரசு..!!

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா குறித்த ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழக அரசு விரைவில் பதில் அளிக்க உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகத்தில் ஏற்படுத்துவதற்கான சட்ட மசோதாவை மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தாக்கல் செய்து, நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது..

அதில், சித்த மருத்துவ பல்கலைக்கழக் வேந்தராக தமிழக முதல்வர் ஸ்டாலின் இருப்பார் என்று அந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டது.. அதுமட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தமிழக அரசே செய்யும் என்று புதிய சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டது.. எனவே இதுகுறித்து கவர்னர் மாளிகையிலிருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டு தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் ஆளுநரின் கேள்விகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் ஓரிரு நாட்களில் விளக்கம் என்பது கொடுக்கப்பட இருக்கிறது. அதற்காக பதிலை தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சித்த மருத்துவ பல்கலைக்கழகம் என்பது சென்னை அடுத்த மாதவரம் அருகே அமைய திட்டமிடப்பட்டுள்ளது.

 

Categories

Tech |