பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளி நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அதைப்போல் நேற்று வார விடுமுறை மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பேருந்து, மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் வந்துள்ளனர்.
தற்போது ரோப்காரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் இழுவை ரயில் மூலம் சென்றுள்ளனர். அதன்பிறகு 2 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசனம் செய்துள்ளனர். இதனால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.