Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சித்திரை திருவிழா கொண்டாட்டம்… பக்தர்கள் இன்றி… திருக்கல்யாணம் சிறப்பு நிகழ்ச்சி..!!

திண்டுக்கல் அபிராமி அம்மன்-பத்மகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா கடந்த வருடம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த வருடம் பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த 15-ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு அபிஷேகம், ரிஷப ஹோமம், சிறப்பு அலங்காரம் ஆகியவை நடத்தப்பட்டு அதன் பின் நந்தி வரையப்பட்ட வெண்கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

மேலும் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் கொடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து மாலையில் பஞ்ச மூர்த்திகள் உள் புறப்பாடு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. அதன்பின் திருக்கல்யாண நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

Categories

Tech |