Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்திரை திருவிழா கொண்டாட்டம்… திருக்கல்யாணம் சிறப்பு நிகழ்ச்சி… கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் ஆனந்தவல்லி, சோமநாதர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் இன்றி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் சிறப்பு வாய்ந்த சோமநாதர், ஆனந்தவல்லி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால் அந்த கோவிலில் சித்திரை திருவிழா உள்திருவிழாவாக நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு நேற்று 10.52 மணிக்கு சோமநாதர், ஆனந்தவல்லி திருக்கல்யாணம் நடைபெற்றது.

அதற்கு முன்னதாக சோமநாதர், ஆனந்தவல்லி பிரியாவிடையுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். இந்த திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்த பிறகு பக்தர்கள் மதியம் 12 மணி முதல் பகல் 2 மணி வரை சாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |