Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு… ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிவகங்கையில் பல்வேறு கோவில்களில் பங்குனி மாதத்தில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து தற்போது சித்திரை மாதம் தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து கோவில்களிலும் சித்திரை மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே சிறப்பு வாய்ந்த அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் சித்திரை மாதத் திருவிழா வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அந்த கோவிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |