தமிழகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லுாரிகளில், ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் யுனானி படிப்புகளில் சேர இன்று முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி www.tnhealth.tn.gov.in என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம். சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி படிப்புக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.ஓமியோபதி மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.