Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில்…. மக்களிடம் கருத்து கேட்கும் அறநிலையத் துறை….!!!!

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்க விரும்பும் நபர்கள் முன் வரலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான கருத்துக்களை வருகின்ற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. நேரிலோ, அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ 21 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் துணை ஆணையர், ஒருங்கிணைப்பாளர், விசாரணைக்குழு, இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, எண் 8, ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையம், கடலூர் -607001 என்ற முகவரியில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் அளிக்கலாம். இதற்காக [email protected] என்ற இமெயில் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது

Categories

Tech |