தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரசவத்திற்கு முன்பாக சிசேரியன் செய்வது அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்த அமைச்சர் அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.