தமிழகத்திலிருந்து மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு நேரடியாக விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலேசியா சிங்கப்பூரை சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் துபாய் மற்றும் கொழும்பு வழியாக தமிழகம் வருகின்றனர். இதற்காக அவர்கள் அதிக பணம் மற்றும் நேரத்தை செலவிட வேண்டியதாக இருக்கிறது.மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கொரோனா கால விமானப் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளாததால் அங்கு வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாடு வரும் பட்சத்தில் நேரடியாக வர இயலாமல் துபாய் மற்றும் கொழும்பு வழியாக வர வேண்டியதாக உள்ளது.
இதனால் அவர்களுக்கு நேரமும் பணமும் அதிக அளவில் வீணாகிறது என கூறியுள்ளார். இவ்வாறு தமிழர்கள் சந்தித்து வரும் இடர்பாடுகளை குறைப்பதற்காகவும் வீணாக பணம் மற்றும் நேரம் செலவழிப்பதை தடுப்பதற்காகவும் தற்காலிகமாக சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு நேரடியாக விமான சேவை அளிக்க வேண்டும் என அவர் அந்த கடிதத்தில் கூறி இருந்தார்.