சிங்கப்பூரில் பல நோய்களால் பாதிக்கப்பட்ட 92 வயது மூதாட்டி ஒருவர் ஓமிக்ரான் தொற்றால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் வசித்து வந்த 92 வயது மூதாட்டி ஒருவருக்கு ஏற்கனவே பல நோய்கள் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக உலகையே அச்சுறுத்தி வரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த 92 வயது மூதாட்டி ஓமிக்ரான் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அந்த மூதாட்டிக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.