Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் சிறையில்….. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு தூக்கு…. பரபரப்பு…. !!!

சிங்கப்பூரில் மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான கல்வந்த் சிங் கடந்த 2013ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார். அப்போது அவரிடம் 60.15 கிராம் டைமார்பின் உள்ளிட்ட 120.9 கிராம் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி அவர் ஜூலை 7ஆம் தேதி தூக்கில் போட படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கல்வந்த் சிங்கை தூக்கில் போடுவதில் இருந்து தடுப்பதற்கு கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் முன்பாக மனித உரிமை ஆர்வலர்கள் நேற்று முன்தினம் கூடி நின்று போராடினார். ஆனால் எந்த ஒரு பலனும் இல்லை. இந்நிலையில் அவர்கள் இருவரும் சிங்கப்பூர் சாங்கி சிறையில் வைத்து தூக்கில் போடப்பட்டனர்.

Categories

Tech |