Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் இந்த பணிக்கு ஆள் தேடி தருபவர்களுக்கு குறிப்பிட்ட தொகை பரிசு…. மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு….!!

சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு செவிலியர்களை பணியமர்த்தி தருபவர்களுக்கு பரிசு தொகையை அறிவித்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஒன்று தங்களுக்கு செவிலியரை பணியமர்த்தி தருபவர்களுக்கு பைண்டர்ஸ் பீஸ் என்ற பெயரில் 12 ஆயிரம் டாலரை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் செவிலியர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனை நிர்வாகம் இவ்வாறு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் செவிலியர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவது இல்லை என்பதும் இந்த தட்டுப்பாடுக்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.

மேலும் கொரோனா நோய் பற்றி தீவிரமாக பரவிய காலகட்டத்தில் பல செவிலியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்தனர். இதுதொடர்பாக சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் மூத்த சுகாதாரத்துறை அமைச்சர் ஒருவர் பேசுகையில் ஆண்டுக்கு 2 ஆயிரம் செவிலியர்கள் ராஜினாமா செய்து வந்தனர். ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஆறு மாதங்களில் சுமார் 1500 செவிலியர்கள் ராஜினாமா செய்துள்ளனர் இது மிகவும் கவலைப்பட வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது எனக் கூறினார். வெளிநாட்டிலிருந்து வரும் செவிலியர்கள் தங்கள் குடும்பத்தினரை காண முடியாத நிலை வரும்போது அவர்கள் அதிக அளவில் ராஜினாமா செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |