Categories
சற்றுமுன் சென்னை திருப்பத்தூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிக்கிய மதுரை…. தப்பிய திருப்பத்தூர்….. மீளும் சென்னை….. !!

தமிழகத்தில் இன்று மட்டும்  4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தமிழகத்தில் 62,778 பேர் மீண்டுள்ளனர். இதனால் 46,860 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் மட்டும் 68,254 பேர் கொரோனா பாதிப்பில் சிக்கி இருக்கின்றார்கள்.தற்போது வரை  24,890 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இன்று மட்டும் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 73  பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 49 அரசு, 46 தனியார் பரிசோதனை மையம் என மொத்தமாக 95 பரிசோதனை நிலையங்கள் உள்ளன. இன்று மட்டும் 34,102 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12,83,419 பேருக்கு மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 56.48 % பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் 36 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை. அதே போல கடந்த 2 நாட்களாக சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்துக்கும் குறைவாக வந்துள்ளது. அதே போல மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரிக்கின்றது. சென்னைக்கு அடுத்தபடியாக இன்று மதுரையில் 308 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |