Categories
மாநில செய்திகள்

சிக்கிய அதிமுக நிர்வாகி… ரகசிய இடத்தில் விசாரணை…. சிறையில் அடைக்க தீவிரம்…!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்‍கில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள நிலையில், அதிமுக முக்‍கிய நிர்வாகி உள்ளிட்ட மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இந்த வழக்‍கில் வெளியான வீடியோ, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு, பின் சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி நகர அதிமுக மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹேரன் பால், பாபு என்கின்ற மைக் பாபு ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மேலும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |