Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சிகலாவுக்கு ஆதரவு போஸ்டர் பெரிய விஷயமா ? அசால்ட் கொடுத்த அமைச்சர்…!!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனிடையே சசிகலா விடுதலையானது முதல் தற்போது வரை அதிமுகவினர் பலரும், முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் என சசிகலாவை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அவர்கள் மீது அதிமுக தலைமை கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த கேள்விக்கு அமைச்சர் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பதிலளித்துள்ளார். சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் எம்எல்ஏ ரகுபதி போஸ்டர் ஒட்டியது பற்றி அமைச்சர் சிவி சண்முகதிடம் எழுப்பியகேள்விக்கு, சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் அடிப்பது என்பது பெரிய விஷயமா ? நான் கூறினால் சசிகலாவுக்கு எதிராக நாளைக்கே ஒரு லட்சம் போஸ்டர் ஒட்டுவார்கள் என பதிலளித்துள்ளார்.

Categories

Tech |