Categories
தேசிய செய்திகள்

சிகரெட்டை பிடுங்கி வீசியதால்…. பெண்ணின் மூக்கு உடைந்தது…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

ஷேர் ஆட்டோவில் பயணித்த நபர் புகைபிடித்ததால் அதனை எதிர்த்து கண்டித்த பெண்ணை மூக்கில் குத்தி ரத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஃபரிதாபாத் என்ற பகுதியில் வாசுசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதேபோன்று குருகிராம் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரியில் லதா என்ற பெண்மணி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த திங்களன்று லதா பணி முடிந்து ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது கிரீன்வுட் சிட்டி அருகே ஆட்டோ சென்றுகொண்டிருந்தபோது தம்பதியர் ஒருவர் அதில் ஏறினார்கள். இதன்பின் ஷேர் ஆட்டோவில் பயணித்த படியே அந்த நபர் புகை பிடித்துள்ளார். இதனால் லதா அவரை கண்டித்து வந்துள்ளார். ஆனாலும் வாசுசிங் தொடர்ந்து புகைபிடித்தபடியே இருந்ததால் லதா அதனைப் பிடுங்கி வெளியே வீசியுள்ளார்.

இதனால் பயங்கர ஆத்திரத்தில் இருந்த வாசு சிங், லதாவின் மூக்குத்தி ரத்த காயம் ஏற்படுத்தினார். மேலும் அவரை தரக்குறைவான தகாத வார்த்தைகளால் பொது வெளியில் வைத்து பேசியுள்ளார். இதனை அடுத்து ஓட்டுனர் ஆட்டோவை நிறுத்தி போலீசுக்கு புகார் கொடுத்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வாசுசிங்கை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறியதால் காவல்துறை வாசுசிங்கை பிணையில் விடுவித்தனர்.

Categories

Tech |