Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

‘சிஎம்சி காலனியில் சாலை பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும்”… மேயர் அறிவுறுத்தல்…!!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி காலனியில் சாலை பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என மேயர் அறிவுறுத்திருக்கின்றார்.

வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதை நேற்று மேயர் சுஜாதா அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே இருக்கும் பகுதிகளில் சாலையோரம் மழை நீர் தேங்காதவாறு சாலை அமைக்க வேண்டும். மேலும் தென்றல் நகரில் பணிகளை மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என கூறிய பின்னர் சிஎம்சி காலனியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்கள் இப்பகுதியில் முக்கிய சாலை பல மாதங்களாகியும் அமைக்கப்படவில்லை. இதனால் இருசக்கர வாகனங்கள் நடைபாதையில் சென்று வருகின்றது. கார், ஆட்டோ, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் இப்பணிகள் எப்பொழுது நிறைவடையும் என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த மேயர் கூறியுள்ளதாவது, பணியை ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தி இருப்பதாகவும் சாலை பணிகள், குறித்த நாட்களுக்குள் முடிவடையும் எனக் கூறினார்.

Categories

Tech |