தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 8 மணி அளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஆனால் கதை குமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்துவ கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்கவில்லை. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளியில் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்கப்படவில்லை. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்து போனதால் வாக்கு எண்ணிக்கை தாமதம்.