Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாவில் சந்தேகம்!…. எரிந்து கொண்டிருந்த உடலை தண்ணீர் ஊற்றி அணைத்த போலீஸ்…. பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள செவ்வேரி கிராமத்தில் வசித்து வந்தவர் பெரியசாமி மகன் ராஜேஷ் (35). கூலி தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், விவாகரத்து ஆகிவிட்டது. இந்நிலையில் ராஜேஷ் சென்ற 4 வருடங்களுக்கு முன் தொளார் கிராமத்தைசேர்ந்த சபீதா எனும் பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதில் ராஜேசுக்கும், சபீதாவிற்கும் இடையில் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் ராஜேஷ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் ராஜேசின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உடலுக்கு இறுதிசடங்குகள் செய்து தகனம் செய்வதற்காக அங்குள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். அடுத்ததாக ராஜேஷின் உடல் எரியூட்டப்பட்டது. இதனிடையில் ராஜேசின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், அவரது உடலை யாருக்கும் தெரிவிக்காமல் தகனம் செய்வதாகவும் சபீதாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பின் காவல்துறையினர் சுடுகாட்டிற்கு விரைந்து சென்று அங்கு எரிந்து கொண்டிருந்த ராஜேஷின் உடல் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பின் பாதி எரிந்த நிலையில் அவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜேஷின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |