Categories
தேசிய செய்திகள்

சாலை விபத்தில் சிக்கி மூச்சு பேச்சின்றி கிடந்த வாலிபர்… முதலுதவி செய்து சுவாசத்தை மீட்ட காவலர்… குவியும் பாராட்டு…!!!

சாலை விபத்தில் மூச்சுப் பேச்சு இன்றி கிடந்த இளைஞருக்கு காவல்துறையினர் ஒருவர் உதவி செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் பொம்மக்கலைச் சேர்ந்த அப்துல்கான் என்பவர், பைக்கில் சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், அப்துல் காயமடைந்து மூச்சுப் பேச்சு எதுவும் இல்லாமல் கிடந்துள்ளார். இதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் சிபிஆர் எனப்படும் முதலுதவியை செய்தார்.

மார்பில் அழுத்தம் கொடுத்து சுவாசத்தை மீட்கும் முதலுதவி அது. சுமார் 5 நிமிடம் கழித்து அப்துல் மீண்டும் சுவாசம் பெற்று கை கால்களை அசைத்தார். பிறகு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அவருக்கு பாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |