Categories
தேசிய செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.50,000 கடன்…. மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள தெருவோர விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி ஸ்வ நிதி யோஜனா என்ற சிறப்பு நுண் கடன் வசதி அழைப்பதற்கான திட்டம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தெருவோர விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வியாபாரிகள் அனைவரும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும். அவ்வாறு வாங்கும் கடனை ஓராண்டு காலத்தில் மாத தவணைகளில் திரும்ப செலுத்த வேண்டும்.

உரிய காலத்தில் இந்த கடன் தொகையை செலுத்தினால் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கடனை திருப்பி செலுத்தினால் வருடத்திற்கு ஏழு சதவீதம் என்ற அடிப்படையில் வட்டி மானியம் வழங்கப்படும். உரிய காலத்திற்கு முன்பாகவே கடனை திருப்பி செலுத்துவரிடம் இவ்வித அபராதமும் வசூல் செய்யப்படாது. அதுமட்டுமல்லாமல் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் செய்பவர்களுக்கு வருடத்திற்கு 1200 ரூபாய் ரொக்கம் திருப்பி வழங்கப்படும்.

முறையாக கடனை திருப்பி செலுத்துபவர்கள் அடுத்த கட்ட கடன் வாங்கும் போது கடன் தொகை அதிகரித்து பெறுவதற்கு தகுதி பெறுவார்கள். தெருவோர வியாபாரிகள் அனைவரும் இந்த சலுகையை பெறுவதற்கு ஒவ்வொரு நிதி ஆண்டிலும் ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31 மற்றும் மார்ச் 31ஆம் தேதி உடன் முடிவடையும் காலாண்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஐம்பது ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான மாதாந்திர கேஸ் பேக் சலுகையும் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |