சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களை பேருந்து மூலம் கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வருவர். மாலை நேரம் மீண்டும் அவர்களை தங்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை தொழிலாளர்களை அழைத்து வந்த பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் தீ விபத்தில் பேருந்து முற்றிலும் இருந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.