சிவகங்கை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதி அருகே உள்ள டி.வேலாங்குளம் கிராமத்தில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் படமாத்தூர் செல்லும் சாலைக்கு திருப்பாச்சேத்தியிலிருந்து சென்றுள்ளார். அப்போது கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், வல்லரசு ஆகியோர் நான்கு வழி சாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து அங்கு வந்த குருநாதன் வழிமறித்து உள்ளனர்.
மேலும் அவருடைய சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 250-ஐ பறித்துக்கொண்டு, பணம் கேட்டு மிரட்டியும், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து குருநாதன் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அய்யனார், வல்லரசு ஆகிய இருவரின் மீதும் வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.