லாரி சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் இருந்து ஓமலூர் வரை சாலை விரிவாக்க பணிக்காக இருபுறமும் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். அங்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எட்டிகுட்டை மேடு பகுதி சாலையின் இருபுறங்களிலும் ஒரு அடி பள்ளம் இருக்கிறது. நேற்று பழைய இரும்பு பொருட்கள் ஏற்றிக்கொண்டு மைசூரில் இருந்து சரக்கு லாரி திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எட்டிக்குட்டை மேடு பகுதியில் வைத்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு லாரி ஓட்டுநர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.