இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கண்டக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காரைநகர் கிழக்கு கடற்கரைசாலை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் வீட்டிற்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். பின்னர் புதுப்பாலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் செந்தில்குமார் மீது வேகமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.