அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பெரியசூண்டி பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகம்மாள்(65) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் ராஜகோபாலபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து கனகம்மாள் மீது மோதியது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கனகம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனகம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.