Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2 பேருந்துகள்  மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு நான்கு முனை சந்திப்பு சாலையில் சென்னையில் இருந்து  அரசு விரைவு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக கன்னியாகுமரியில் இருந்து வந்த ஆம்னி பேருந்து நிலைதடுமாறி அரசு விரைவு பேருந்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த   5 பேரையும்  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |