Categories
மாநில செய்திகள்

சாலையில் மாஸ்க் அணியாமல் சென்ற நபர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கவும், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தவும் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் திடீரென்று வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவரது உத்தரவின் அடிப்படையில் உதவி இயக்குனர் கண்ணன் மீஞ்சூர் பஜாரிலுள்ள கடைகளுக்கு நேரில் சென்று பிளாஸ்டிக் கவர் மற்றும் பைகளை விற்கக்கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் கடைகளில் சோதனையிட்ட அவர் தடை செய்யப்பட்ட 197 கிலோ பிளாஸ்டிக்கவர்களை பறிமுதல் செய்தார். மேலும் சாலையில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்தார். அதன்பின் முககவசத்தின் நன்மைகள் தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது மீஞ்சூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் வெற்றி அரசு இதர பிரிவு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Categories

Tech |