Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி…. திடிரென நடந்த விபரீதம்…. திவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கக்கன் காலனி பகுதியில் சூரியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று வால்பாறை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு விரவு ஏற்றிக்கொண்டு வால்பாறை-சாலக்குடி சாலையில் லாரியில்  சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி சூரியனின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த  தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி படுகாயமடைந்த சூரியனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |