கூலித்தொழிலாளிகளை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நண்பரான தியாகு என்பவருடன் சேர்ந்து வேலைக்கு சென்றுவிட்டு தச்சநல்லூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் இவர்களிடம் தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தகராறு செய்த நபர் தச்சநல்லூரை சேர்ந்த அருண் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அருணை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்