Categories
மாநில செய்திகள்

“சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ”… திடீர் தீ விபத்து… பெரும் பரபரப்பு….!!!!!!!!!

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை ஊழியர்களை அழைத்து சென்ற ஷேர் ஆட்டோ வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் அந்த வழியாக வந்த போக்குவரத்து போலீஸ்காரர் சுதாகர் என்பவர் அந்த வழியாக சென்ற தண்ணீர் வாகனத்தை நிறுத்தி அதில் இருந்து தண்ணீரை ஊற்றி ஆட்டோவில் ஏறிந்து கொண்டிருந்த தீயை அணைத்துள்ளார்.

அதன்பின் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை ஊற்றி மேலும் எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து உள்ளனர். இதில் ஆட்டோ முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. டிரைவர் உரிய நேரத்தில் செயல்பட்டதால் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை. மேலும் இந்த சம்பவம் பற்றி நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |